வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டி விட்டால் அரசுக்கு ரோசம் வந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், கம்யூனிஸ்ட் களுக்கு கொடுக்கும் பணத்தை குறைத்து விடுவார்கள்
does it vote for communist ?
SIR ஆள்ங்க கிட்டே சொல்லுங்க.
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தெருநாய்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி போஸ்டர் ஒட்டியது பேசுபொருளாகியுளள்து. நத்தம் மீனாட்சிபுரம், அசோக்நகர்,செட்டியார்குளத்தெரு, முஸ்லீம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. ரோட்டில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை கடித்து குதறி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நத்தத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரி மா.கம்யூ., சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்து, இல்லையேல் அவைகளை வாக்காளர் பட்டியலில் சேர்த்து விடு என்றும் அதில் தெரிவிக்கபட்டுள்ளது.
இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டி விட்டால் அரசுக்கு ரோசம் வந்து நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், கம்யூனிஸ்ட் களுக்கு கொடுக்கும் பணத்தை குறைத்து விடுவார்கள்
does it vote for communist ?
SIR ஆள்ங்க கிட்டே சொல்லுங்க.