உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் உருளைக்கிழங்கு சீசன் துவக்கம்

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு சீசன் துவக்கம்

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைகால உருளைக்கிழங்கு சீசன் துவங்கியுள்ளது.இம்மலைப் பகுதியில் பூம்பாறை, வடகவுஞ்சி, மன்னவனுார், பூண்டி, கிளவரை, வில்பட்டி பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு தற்போது அறுவடை செய்யப்படுகிறது. பறிக்கப்படும் கிழங்குகள் மதுரை, திருச்சி, திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்பப்படுகின்றன. ஏனைய பிற ரக உருளைக்கிழங்கு விளைச்சல் காணும் நிலையில் கொடைக்கானலில் விளையும் உருளைக்கிழங்கு ருசி, அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் சந்தையில் பொதுமக்கள் அதிகம் விரும்புவதால் ஏக கிராக்கி நிலவுகிறது. கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது. வனவிலங்குகள், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்வது சவாலாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை