உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீபாவளி வாரத்தில் மின்தடைக்கு தடை

தீபாவளி வாரத்தில் மின்தடைக்கு தடை

வடமதுரை : தீபாவளி பண்டிகை அக்.20ல் கொண்டாடப்படுவதால் அக்.15 முதல் 21 வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் துணை மின் நிலையங்களில் டிரான்ஸ்பார்மர் பராமரிப்பிற்காகவும், மின் பாதைகளில் குறுக்கிடும் மரக் கிளைகளை அகற்ற வசதியாகவும் மாதந்தோறும் ஒரு நாளை தேர்வு செய்து காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவது வழக்கம். அக்.20ல் தீபாவளி பண்டிகை வருவதால் முந்தைய ஒரு வாரம் வணிக நிறுவனங்களில் வியாபாரம், உணவு வகை தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடக்கும். இதனால் இந்த நேரங்களில் மின்தடை செய்தால் பல தரப்பினரும் பாதிக்கப்படுவர். இதனால் அக்.15 முதல் 21 வரை பரா மரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்ய வேண்டாம் என மின்வாரியம் முடிவு செய்து இதற்கேற்ப மின்தடை பராமரிப்பு நாட்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !