உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை நந்தி, கொடிமரம், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதர், நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மேற்கு ரதவீதி சிவன் கோவில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில் சிவன் சன்னிதி, என்.ஜி.ஒ., காலனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சிவன் சன்னிதி உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் எம்.வி.எம். நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னிதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டது.பழநி: பழநி கோதைமங்கலம் பெரிய ஆவுடையார் கோயில், அடிவாரம் மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், பழநி இடும்பன் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வேளீஸ்வரர் கோயியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நந்தி பகவான், மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை