உள்ளூர் செய்திகள்

அவரை விலை உயர்வு

ஒட்டன்சத்திரம், செப்.22- ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரைக்காய் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.65க்கு விற்பனை ஆனது. ஒட்டன்சத்திரம், வடகாடு, கண்ணனுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அவரைக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. கடந்த வாரத்திற்கு முன்பு பல இடங்களில் அறுவடை மும்முரமாக நடந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. அப்போது அவரைக்காய் கிலோ ரூ.45 க்கு விற்பனை ஆனது. தற்போது அறுவடை குறைந்துள்ள நிலையில் வரத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் விலை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று அவரைக்காய் கிலோ ரூ.65க்கு விற்பனை ஆனது. இனிவரும் நாட்களில் வரத்து குறையும் என்பதால் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ