உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு நிலத்தை ஏமாற்றி விற்றவருக்கு சிறை

அரசு நிலத்தை ஏமாற்றி விற்றவருக்கு சிறை

திண்டுக்கல்: அரசு நிலத்தை ஏமாற்றி விற்ற தேனி நபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி மங்களம். சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் போடியை சேர்ந்த கண்ணன் 50, என்பவர், தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தேனியை அடுத்த மேகமலை பகுதியில் பட்டா நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும் தெரிவித்து பழக்கமாகினார். இதை நம்பிய மங்களமும் அந்த இடத்தை வாங்கினார். அதன் பிறகு அரசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மங்களம் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கண்ணன், உடந்தையாக இருந்த 5 பேர் மீது புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் கண்ணன் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் 2 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை , ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் தீர்ப்பளித்தார். மற்ற 5 பேரையும் விடுவித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மதிவாணன் ஆஜராகினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை