உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சிறைக்கைதி மரணம்

திண்டுக்கல்லில் சிறைக்கைதி மரணம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறையில் இருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி உடல்நலக்குறைவால் இறந்தார். 2012-ல், மதுரை தி.மு.க., பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த ரவுடி கும்பல் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்தது. போலீசிற்கும் ரவுடிகளுக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரவுடி சினோஜ் 32 ,உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் 57, கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அஜித், எர்ணாகுளத்தை சேர்ந்த வர்க்கீஸ் 42, ஆகிய 3பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணைக்கு வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வர்க்கீசை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்த நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேல்விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ