பரிசளிப்பு விழா
பழநி: பழநி நகராட்சி மாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் நடைபெற்ற கணித திறனறிதல் தேர்வில் பங்கு பெற்றனர். 5 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சுதா, உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், பழநி வட்டார கல்வி அலுவலர்கள் ரமேஷ் குமார், ஆனந்தன் கலந்து கொண்டனர்.