உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

கேரம் போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், புனித ஜான்பால் அகாடமி,பிரவீன் செல்வக்குமார் நினைவு கேரம் அகாடமி இணைந்து நடத்திய 6ம் ஆண்டு கேரம் போட்டி நடந்தது. பள்ளி மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் நினைவு சுழற் கோப்பையை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைபள்ளி, மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றது. இதற்கான கோப்பை,சான்றிதழை மாவட்ட கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவர் காஜாமைதீன், புனித ஜான்பால் அகாடமி தாளாளர் பன்னீர்செல்வம் வழங்கினர். பள்ளி முதல்வர் லுாயிசாரெமி, கேரம் மாவட்ட நிர்வாகிகள் ஜெய ஆரோக்கிய செல்வன், சூரிய பிரகாஷ்,ஆல்வின் செல்வக்குமார்,ஜெஸ்பர் செல்வக்குமார்,மருதமுத்து, சசிபாலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை