விளைபொருள் கண்காட்சி கூட்டம்
திண்டுக்கல்: ஆத்துார் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வழி தோட்டக்கலை விளைபொருள் கண்காட்சி, பாரம்பரிய பண்ணை மேம்பாட்டு திட்டம் குறித்த விவசாயிகள் கூட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் நடந்தது. கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ரவீந்திரன் பேசினார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர்கள் காயத்ரி, திலீப், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலெக்சாண்டர், கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார் மற்றும் ஆத்தூர், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.