உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கலெக்டரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம்: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவிடம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை கசக்கி வீசியதுடன், போலீசாரிடம் மாநில நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட்டார். கலெக்டரின் இந்த செயலை கண்டித்து ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட கிளை தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மகாராஜா, தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் வட்டக் கிளை செயலாளர் பரமேஸ்வரன் ,தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை தலைவர் சிவனேஷ் பேசினர். துணைத் தலைவர் நதியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை