உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரோட்டில் குப்பையை கொட்டி மறியல்

 ரோட்டில் குப்பையை கொட்டி மறியல்

வடமதுரை: அய்யலுார் அருகே எஸ்.புதுப்பட்டியில் துாய்மை பணியாளர்கள் தினமும் வீடுகளில் குப்பை சேகரித்து ஊராட்சி பேட்டரி வாகனம் மூலம் 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கிடங்கில் சேர்ப்பர். சில நாட்களுக்கு முன்பு பேட்டரி வாகனம் ஒன்று பழுதான நிலையில் பழுதை தூய்மை பணியாளர்களே சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று அப்பகுதியில் சேகரித்த குப்பையை அய்யலுார் பாலவிடுதி ரோட்டில் கொட்டி குப்பை கூடைகளை குறுக்கே வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை