மேலும் செய்திகள்
ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
12-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆவணம், நகல் எழுதுவோர் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பத்திரப் பதிவு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இ டெண்டர் அறிவிப்பு, ஸ்டார் 3.0 திட்டம், ஆவணப்பதிவில் நேரில் வரத் தேவையில்லாத, காகிதமில்லா நடைமுறைகளை எதிர்த்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை விளக்க கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செந்தமிழ் பிரபாகரன், செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர் செல்வி, உறுப்பினர்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
12-Oct-2026