உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழங்குடியின கிராமத்திற்கு புத்தாடை வழங்கல்

பழங்குடியின கிராமத்திற்கு புத்தாடை வழங்கல்

கொடைக்கானல்: நெய்க்காரப்பட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக கொடைக்கானல் பட்டியக்காடு பழங்குடியின மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு புதுச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் ரவீந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சங்கத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுப்புராஜ், மயில்சாமி, ஹரிகரன், மனோகரன் முன்னிலை வகித்தனர். முகாமில் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்டோருக்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பழங்குடியின தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ