புரட்டாசி ஆன்மிக யாத்திரை
வடமதுரை : எரியோடு திருஅருள் பேரவை சார்பில் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் மாரிமுத்து தலைமையில் இக்குழுவினர் புரட்டாசி சனிக்கிழமைகளில் பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிக ஸ்தல யாத்திரை செல்கின்றனர். நடப்பாண்டில் முதல் புரட்டாசி சனிக்கிழமை வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள், 2வது வாரம் கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள், 3வது வாரம் ராமகிரி கல்யாணநரசிங்கப் பெருமாள் கோயில்களுக்கு சென்றனர். நேற்று தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாதபெருமாள் கோயிலுக்கு சென்ற இக்குழுவினர் அங்கு பஜனை, பக்தி இன்னிசை, சொற்பொழிவும், தீபாராதனை நடத்தினர்.