முயல் வேட்டை: 3 பேர் கைது
கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே கோம்பை, பன்றிமலை, தோணிமலை பகுதியில் முயல், மயில், மான், காட்டுப்பன்றி வேட்டை தொடர்வதாக புகார் எழுந்தது. நேற்று கன்னிவாடி ரேஞ்சர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது புடரிமேடு பகுதியில் கண்ணி அமைத்து முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மைக்கேல்பட்டி சூர்யா 27, வீ.கூத்தம்பட்டி ஆச்சிமுத்து 55, தருமத்துப்பட்டி செல்வகுமார் 27 ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். முயல் பிடிக்கும் வலை, இறந்து கிடந்த ஒரு முயல் பறிமுதல் செய்யப்பட்டன.