வடமதுரை சந்தையில் குவிந்த பந்தய சேவல்கள்
வடமதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடமதுரை வாரச்சந்தையில் நேற்று ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டிருந்தன. வடமதுரையில் சனிக்கிழமை நடக்கும் வாரச்சந்தையில் ரோட்டோரத்தில் கோழி விற்பனை நடப்பதுண்டு. தீபாவளிக்கு முந்தைய சந்தை என்பதால் ஏராளமான பந்தய சேவல்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. ரூ.3 முதல் 30 ஆயிரம் வரை விலை போனது வியாபாரிகள் கூறுகையில், 'சேவல் சண்டை பந்தயங்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பரவலாக நடக்கிறது. சேவல்களை வாங்க அதிகளவில் வெளிமாநில வியாபாரிகளும் வருகின்றனர். இதனால் வடமதுரை சுற்றுப்பகுதியில் பந்தய சண்டை சேவல் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. ஒரு வீட்டில் 10 சேவல்களை வளர்த்து பயிற்சி தந்தால் ஆறே மாதங்களில் ரூ.1.50 லட்சம் வரை எளிதாக லாபம் பார்க்க முடியும் என்பதால் பலரும் பந்தய சேவல் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் 'என்றனர்.