மேலும் செய்திகள்
பழநியில் புதிய தேர் வெள்ளோட்டம்
28-Jan-2025
பழநி: ''பழநி நகருக்கு வரும் முக்கிய சாலைகளில் உள்ள ரயில்வே கிராசிங்களில் ரூ.300 கோடிக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படும்'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.பழநி போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு மையம் , கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்த அவர் பேசியதாவது: பழநி முழுவதும் 290 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை வாகனங்களில் உள்ள பதிவு எண்களை பதிவு செய்யும் திறனுடையவை. மக்கள் பேசும் குரலும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் குற்ற சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல், விதிமீறல்கள் கட்டுப்படுத்த இயலும். சத்திரப்பட்டி, ஆயக்குடி ரயில்வே கிராசிங், கோவை சாலையில் தாலையூத்து ரயில்வே கிராசிங் ,பழநி- தாராபுரம் சாலையில் ரூ. 300 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., தனஞ்செயன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர்.
28-Jan-2025