உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே தொழிற்சங்க தேர்தல்

ரயில்வே தொழிற்சங்க தேர்தல்

திண்டுக்கல்: 11 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ரயில்வே தொழிற் சங்கங்களுக்கான தேர்தல் நேற்று திண்டுக்கல்லில் துவங்கிய நிலையில் ஊழியர்கள் அமைதியான முறையில் ஓட்டு பதிவு செய்து பணிகளுக்கு சென்றனர். ரயில்வே தொழிற் சங்கங்களுக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஓருமுறை நடக்கும். ஆனால் 2013 முதல் 11 ஆண்டுகளாக நடக்கவில்லை. தற்போது டிச.4.5ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் எஸ்.ஆர்.எம்.யு.,-ஏ.ஐ.ஆர்.எப்.,-டி.ஆர்.இ.யு.,-எஸ்.ஆர்.இ.எஸ்.ஆர்.எம்.யு.,-டி.ஆர்.கே.எஸ்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. திண்டுக்கல் கிளையில் அம்பாத்துறை, அக்கறைப்பட்டி, தாமரைப்பாடி,வடமதுரை,கொடைரோடு,ரெட்டியார் சத்திரம் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் 646 பேர் ஒட்டுப்பதிவுக்கு தகுதி பெற்றவர்களாகவும், பழநி கிளையில் 280 பேரும் உள்ளனர். இவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக தொழிற் சங்கத்தினர் 2 மாதங்களுக்கு முன்பே ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரு நாட்கள் நடக்கும் இந்த தேர்தல் திண்டுக்கல் ரயில்வே திருமண மண்டபத்தில் நேற்று காலை 8:00 மணி முதல் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த தேர்தலில் காலை முதலே திண்டுக்கல் கிளையை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் அமைதியான முறையில் ஓட்டுபதிவு செய்து பணிகளுக்கு சென்றனர். மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவுகள் நடந்தது. இதேபோல் பழநியில் 1வது பிளாட் பாரத்தில் அமைக்கப்பட்ட பூத்திலும் ஓட்டுப்பதிவு நடந்தது. இதுவரை திண்டுக்கல்லில் 280, பழநியில் 162 ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. இன்றும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை