உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு பள்ளங்களில் மழை நீர் தேங்க கொசுக்கள் உற்பத்தி ஜோர்

ரோடு பள்ளங்களில் மழை நீர் தேங்க கொசுக்கள் உற்பத்தி ஜோர்

டூவீலர்களை நிறுத்துவதால் நெரிசல் : திண்டுக்கல் ஏ.எம்.சி. ரோட்டில் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்கள் ,வாகனங்கள் அதிகமாக செல்லும் பாதை என்பதால் வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முனியப்பன், திண்டுக்கல்.மின் கம்பத்தை சூழும் செடிகள் : வடமதுரை அண்ணாநகரில் மின்கம்பத்தின் உச்சி வரை படர்ந்துள்ள செடிகளால் தேவாங்கு போன்ற அரிய வகை உயிரினங்கள் இதன் மீது ஏறுவதால் பாதிப்படையும் வாய்ப்பு உள்ளது. இதை கருதி மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். ----கந்தசாமி, வடமதுரை.ஊர் பெயரை மறைக்கும் செடிகள் : ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் பரப்பலாறு அணை பிரிவு அருகே வழிகாட்டும் பலகையில் ஊர்களின் பெயர்கள் தெரியாத வகையில் செடிகள் மறைத்துள்ளன. செடிகளை அகற்றி பெயர் பலகைகள் பளிச்சென தெரிய செய்ய வேண்டும். ---சீனிவாசன் ஒட்டன்சத்திரம்.குப்பை எரிப்பு : திண்டுக்கல் ராமசாமி காலனி அறிவுத்திருக்கோயில் செல்லும் வழியில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அங்கன்வாடி மையம் இருப்பதால் அஸ்த்துமா போன்ற தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. -சின்னத்தம்பி, திண்டுக்கல்.தண்ணீர் தேக்கத்தால் கொசுக்கள் : குள்ளனம்பட்டி ஐஸ்வர்யா கார்டனில் மழை நேரங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. நடந்து செல்லும் போது பாதங்களில் புண் ஏற்படுகிறது . இதை அகற்ற வேண்டும்.-அசோகன், குள்ளனம்பட்டி.---------சேதமடைந்த ரோடால் அவதி : கொடைக்கானல் குறிஞ்சியாணடவர் கோயில் செல்லும் ரோட்டில் செட்டியார் பூங்கா வளைவில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. மழைநேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்க கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறுகிறது.-பாண்டி, கொடைக்கானல்.----------அடிகுழாய் பழுதால் பரிதவிப்பு : திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் அடிகுழாய் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக அப்பகுதி மக்கள் தவியாய் தவிக்கின்றனர். அடி குழாயை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜமாணிக்கம், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை