உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்

சர்வீஸ் ரோட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டிலிருந்து தாராபுரம் வழித்தடத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் போதுமான அளவிற்கு வடிகால் வசதி இல்லாததால் மூன்று நாட்களாக மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.லெக்கையன்கோட்டையிலிருந்து பொள்ளாச்சி வரை புதிய பைபாஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரை திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கோவை திருப்பூர் செல்லும் வானங்கள் இந்த பைபாஸ் ரோட்டில் இருந்து பிரிந்து சர்வீஸ் ரோட்டில் செல்ல வேண்டும்.மூன்று நாட்களாக இப்பகுதியில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக வந்த காட்டாற்று வெள்ளம் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால் சர்வீஸ் ரோடு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் இதனை கடந்து சென்ற வாகனங்களின் இன்ஜினுக்குள் மழைநீர் புகுந்ததால் வழியில் பழுதாகி நின்றன.சர்வீஸ் ரோட்டில் போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்தி மழை காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்......


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !