ரேஷன் கடை திறப்பு
வடமதுரை : தென்னம்பட்டி எலப்பார்பட்டி, மோர்பட்டி நாடுகண்டனுார் கிராமங்களில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,'' நாடு சுதந்திரம் பெற்ற பின் 2021 வரை வேடசந்துார் தொகுதியில் 92 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. எனது நான்கரை ஆண்டு பதவி காலத்தில் மட்டும் முழு, பகுதி நேரம் என 60 ரேஷன் கடைகளை திறந்துள்ளேன் '' 'என்றார். தாலுகா வழங்கல் அலுவலர் சண்முகம், கூட்டுறவு சங்க செயலாட்சியர்கள் திராவிடமொழி, கார்த்திகை செல்வி, செயலாளர் பொன்னுச்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.