உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை முற்றுகை

வடமதுரை: கொம்பேறிபட்டி காடையனுார் பகுதிநேர ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். காடையனுார், மம்மானியூர், ஊரானுார் பகுதி மக்களுக்காக இங்கு பகுதிநேர கடை திறக்கப்பட்டது. அரிசி தவிர்த்து மற்ற பொருட்கள் வினியோகம் முழு அளவில் இல்லை என இப்பகுதி மக்கள் இன்று (நவ.,17) ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘இம்மாதம் பருப்பு ஒதுக்கீடு குறைவாக வந்ததால் சிக்கல் உள்ளது. அடுத்த மாதத்தில் சரி செய்து தரப்படும்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !