புதுரோட்டில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
எரியோடு: திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலுார், குஜிலியம்பாறை வழியாக கரூருக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த ரோட்டில் எரியோடு புதுரோடு கிராமத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக 8 வீடுகள் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று மாலை மண் அள்ளும் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றினர்.