உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது போல் அதிகாரிகளால் பழநி அடிவாரம், கிரி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.பழநியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற போவதாக ஜன. 5ல் அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது. இதை கண்காணிக்க ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.இதை தொடர்ந்து பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம்1000க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. கிரிவீதி கடைக்காரர்கள் சிறிது நேரம் அவகாசம் கேட்க அதிகாரிகள மறுத்தனர். கடைக்காரர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி முருகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !