உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரங்களில் வைக்கப்பட்ட பலகைகள் அகற்றம்

மரங்களில் வைக்கப்பட்ட பலகைகள் அகற்றம்

வேடசந்துார்: வேடசந்துார் சுற்றுப்பகுதியில் உள்ள ரோட்டோர மரங்களில் ஆணி கொண்டு அடிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான விளம்பரப் பலகைகள், தினமலர்செய்தி எதிரொலியாகஅகற்றப் பட்டன.வேடசந்துார் வடமதுரை ரோடு, கோவிலுார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் உள்ள மரங்களில் தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகள் மட்டுமின்றி ,பொது விளம்பர போர்டுகளும்ஆணிகள் கொண்டு அடித்து வைத்திருந்தனர். மனிதனின் கையளவு தடிமனில் வளர்ந்துள்ள மரங்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதை தொடர்ந்து வேடசந்துார் பகுதியில் உள்ள மரங்களில் ஆணிகள் மூலம் அடிக்கப்பட்ட போர்டுகள் அகற்றப்பட்டன. இது போல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணிகள் அடிக்கப்பட்ட போர்டுகளையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ