உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடிக்கம்பங்களை அகற்றுக கலெக்டர் அறிவுறுத்தல்

கொடிக்கம்பங்களை அகற்றுக கலெக்டர் அறிவுறுத்தல்

திண்டுக்கல்: உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி, சாதி ,இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர், மத ரீதியான அமைப்புகள், சாதிய, இதர அமைப்புகள் கொடிக்கம்பங்கள், பீடங்களை சம்பந்தப்பட்ட அமைப்பினர் 12 வார காலத்திற்குள் அகற்றிட வேண்டும். தற்காலிக கொடிக்கம்பங்கள் வைக்க உரிய அனுமதி பெற்று , நிகழ்ச்சி முடிந்த பின் கொடிக்கம்பங்கள் அகற்றுவதோடு, வைக்கப்பட்ட சாலையில் ஏற்பட்ட பள்ளம் போன்ற பாதிப்புகளை சம்பந்தப்பட்ட அமைப்பினரே சரிசெய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சரிசெய்யப்பட்டு அதற்கான தொகை சம்பந்தப்பட்ட அமைப்பினரிடமிருந்து வசூல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ