வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தவேலையை உள்ளூர் பஞ்சாயத்துகளிடம் விடலாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றாமல் இருப்பதால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றினால் மழைக்காலங்களில் குளங்களில் தண்ணீர் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது.மாவட்டம் முழுவதும் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் குளத்து பாசனங்களை நம்பியே விவசாயம் செய்கின்றனர். தற்போதும் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றனர். இங்குள்ள குளங்களுக்கு வரும் நீராதாரங்களில் உள்ள வழித்தடங்களில் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் பல வழித்தடங்கள் மறைக்கப்பட்டுள்ளது. குளங்களிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துார்வாராமலிருப்பதால் கருவேல மரங்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளன. குளங்களில் நீர் தேங்காமல் கருவேல மரங்கள் தடுப்பதால் விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலை தொடர்கிறது. இதை கருதி நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குளங்களை துார்வார வேண்டும் என பலர் மனுக்கள் கொடுத்தபோதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. தொடரும் இப்பிரச்னையால் கோடை காலம் மட்டுமின்றி மழைக்காலங்களிலும் குளங்களில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. இதனால் பலரும் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை மீது தலையிட்டு குளங்கள், நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து நிற்கும் கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலங்களில் இதை அகற்றினால் அடுத்து வரும் மழைக்காலங்களில் குளங்களில் தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு பயன்படுத்த ஏதுவாக இருக்கும்...............கவனம் தேவைமாவட்டத்தில் குளங்களில் அதிகளவில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. தொடரும் இப்பிரச்னை மீது பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள் நடவடிக்கை எதுவும் எடுக்காமலிருப்பதால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் உள்ளது. பல குளங்கள் மழை நேரங்களிலும் நிரம்பாமல் உள்ளது. கோடை நேரத்தில் குளங்களிலிருக்கும் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கவனத்துடன் இப்பணியை செய்தால் விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.கார்த்திக்வினோத், பா.ஜ.,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர், திண்டுக்கல்.
இந்தவேலையை உள்ளூர் பஞ்சாயத்துகளிடம் விடலாம்