உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேதமான மின் ஒயர்கள், டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யலாமே! மின்வாரியம் கண்காணிக்க வேண்டும்

சேதமான மின் ஒயர்கள், டிரான்ஸ்பார்மர்களை சரி செய்யலாமே! மின்வாரியம் கண்காணிக்க வேண்டும்

மாவட்டம் முழுவதும் புதிய மின் இணைப்புகள் கிடைக்கப்பெற்ற விவசாயிகளும் நிலத்தை சுத்தப்படுத்தி விவசாயத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு மழை கொட்டுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக இருப்பதால் மரங்கள் ஆங்காங்கே விழுகின்றன. சில இடங்களில் சேதமான மின்கம்பங்களும் சாய்கின்றன. பல இடங்களில் மின்ஒயர்கள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இரவு மழை அதிகரித்திருப்பதால் மின்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தலை துாக்குகின்றன. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும் பெரிய அளவிலான சேதங்களை சரி பார்ப்பது இல்லை. உயர் அழுத்தத்தால் பல இடங்களில் மின்கம்பத்தில் மேல் ஒயர்களை இணைக்கும் பீங்கான் குமிழ்கள் வெடித்து சிதறுகின்றன. காலாவதியான டிரான்ஸ்பார்மர்களால் கிராமங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. மின்வாரியத்தினர் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை