உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கிய தாய் மகள் மீட்பு

திண்டுக்கல் அரசு மருத்துவமனை லிப்டில் சிக்கிய தாய் மகள் மீட்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த தாய்.மகள் அங்கிருந்த லிப்டில் சிக்கிய நிலையில் தீயணைப்பு துறையினர் இருவரையும் போராடி மீட்டனர். திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்75. இவருக்கு உடல்நலம் பிரச்னை காரணமாக 10 நாட்களுக்கு முன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பஞ்சவர்ணத்தை கவனிக்க மகள் பழனியம்மாள் வந்தார். பஞ்சவர்ணத்தை,ஸ்கேன் எடுப்பதற்காக டாக்டர்கள் அறிவுறுத்தினர். 2வது மாடியிலிருந்து முதல் மாடிக்கு பஞ்சவர்ணமும்,பழனியம்மாள் இருவரும் அங்கிருந்த லிப்டில் ஏறி இறங்கினர். லிப்ட்,முதல் மாடிக்கும்,2 வது மாடிக்கும் இடையில் சிக்கியது. பதற்றத்தில் இருவரும் கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து லிப்டில் சிக்கிய இருவரையும் மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ