உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடியிருப்போர் சங்க பொங்கல் விழா

குடியிருப்போர் சங்க பொங்கல் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திஜிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் தின விளையாட்டு விழா நடந்தது.திண்டுக்கல் - திருச்சி ரோட்டில் உள்ள காந்திஜிநகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 22ம் ஆண்டு பொங்கல்விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வென்றவர்களுக்கு டாக்டர் அமலாதேவி பரிசு வழங்கினார். குடியிருப்போர் சங்க தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் சித்ராமுத்துக்குமார், பொருளாளர் ஜெயசித்ரா, துணைத்தலைவர் சுரேஷ், முன்னாள் தலைவர்கள் , ரவிச்சந்திரன், ஜெயராஜ், ராமசாமி ,செயற்குழு உறுப்பினர்கள் வீர கணேஷ் ,ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி