மேலும் செய்திகள்
கவர்னர் ரவிக்கு வரவேற்பு
02-Dec-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வெரியப்பூர் ஊராட்சி அண்ணாமலைபுதுாரை சேர்ந்தவர் சிவராஜ் 39. இவர் டிச.28ல் நடந்த விபத்தில் காயம் அடைந்தார். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் சம்மதத்துடன் சிவராஜின் உடல் உறுப்புகள் அதே மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகள் அண்ணாமலைபுதுாரில் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தி, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் தாசில்தார் பழனிச்சாமி உடன் இருந்தார்.
02-Dec-2024