உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருவாய் சங்கம் ஆர்ப்பாட்டம்

வருவாய் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்றிடவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணியில் இருந்து வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார். மாவட்டதலைவர் ஜான்பாஸ்டின், நிர்வாகிகள் விக்னேஷ், ராஜரத்தினம், சக்திவேல் முன்னிலை வகித்தனர். ஒட்டன்சத்திரம் : தாசில்தார் அலுவலகம் முன்பு வட்ட ஒருங்கிணைப்பாளர் மகாராஜா தலைமை வகித்தார், வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினர். வட்ட நில அளவையர்கள் சங்கச் செயலாளர்கள் காளிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை