உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வருவாய் அலுவலர்கள் போராட்டம்

வருவாய் அலுவலர்கள் போராட்டம்

திண்டுக்கல் : வருவாய் துறை அலுவலகங்களில் பணியிறக்கம், பெயர் மாற்றம், விதி திருத்தம், அலுவலக உதவியாளர் காலியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்,கலெக்டர் அலுவலகம், மேற்கு, கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்தது. அலுவலக வாயில் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். வட்ட பொறுப்பாளர்கள் வேல்முருகன், ஜமுனாராணி முன்னிலை வகித்தனர். கிருஷ்ணவேணி, காளீஸ்வரி, உமா மகேஸ்வரி, வெண்ணிலா, சுகன்யா, வீரமாதேவி, கதிரேசன் ஜீவா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ