உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரிங்ரோடு பணி; விவசாயிகள் மறியல், தள்ளுமுள்ளு

ரிங்ரோடு பணி; விவசாயிகள் மறியல், தள்ளுமுள்ளு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரிங் ரோடு அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது இவர்களுக்கும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச்சாலை முள்ளிப்பாடி பகுதியிலிருந்து அடியனுாத்து வழியாக மதுரை நான்கு வழிச் சாலைக்கு ரிங் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைவான இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் உரிய இழப்பீடு கோரி அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில் கோவுகவுண்டன்பட்டி அருகே திண்டுக்கல் - சிலுவத்துார் ரோட்டில் நேற்று ரோடு மறியல் நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ராமசாமி, தலைவர் பெருமாள் தலைமை வகித்தனர்.சி.பி.எம்., ஒன்றிய செயலர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.வடமதுரை போலீசாார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோடு அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி கோஷட்டனர். இதனால் போலீசார் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண் விவசாயி ஜோதி 40, மயங்கி விழுந்தார். டி.எஸ்.பி., பவித்ரா, வருவாய் துறை அலுவலர்கள் ஜூன் 16 ல் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இயைடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ