கொடைக்கானலில் ரோடு சேதத்தால் அவதி
கொடைக்கானல்: கொடைக்கானல் கோக்கர்ஸ்வாக் பிரையன்ட் பூங்காவை இணைக்கும் சந்திப்பு ரோடு சேதமடைந்துள்ளது. இந்த குறுக்கு ரோடு இரு ஆண்டுகளுக்கு முன் கான்கிரிட் ரோடாக நகராட்சி அமைத்தது. தரமின்றி அமைத்ததால் சில மாதங்களிலே ரோடு குண்டு, குழியுமாக சிதிலமடைந்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் தாழ்வான ரோட்டில் விபத்தில் சிக்குகின்றன. நடை பயணமாக இவ்விரு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் தடுமாறுகின்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலில் முக்கிய ரோட்டின் அவல நிலையால் நாள்தோறும் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். நகராட்சி சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.