சாலை பணியாளர்கள் முற்றுகை
வேடசந்துார்: வேடசந்துார் எஸ்.ஏ.பி., நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்டுறவு நாணய கடன் சங்கத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், சாலை பணியாளர்கள் பலர் கடன் பெற்று இருந்தனர். இதில் 12பேர் 8 மாதங்களுக்கு முன்பே அங்கு பணியாற்றிய செயலாளர் விக்னேஸ்வரன் என்பவரிடம் வாங்கிய கடனை முழுவதுமாக செலுத்திய நிலையில் அதற்கான ரசீதும் வைத்துள்ளனர்.தற்போது செயலாளர் மாறி உள்ள நிலையில் கடனை செலுத்த மார்ச்சில் நோட்டீஸ் அனுப்பினர். சாலை பணியாளர்கள் கடன் சங்க அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.இதனிடையே நேற்று மீண்டும் கட்டிய கடனை செலுத்த கோரினர். இதனால் கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட யிட்ட சாலை பணியாளர்கள் கடன் சங்க அலுவலகம் உள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன் கூறியதாவது : கடன் வாங்கிய 12 பேர் கடனை செலுத்தி விட்டனர். அதற்கான ரசீது உள்ளது. இருந்தும் மீண்டும் கடனை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால் ஊழியர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சரியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.