சாலை பணியாளர்கள் ஒப்பாரி போராட்டம்
திண்டுக்கல்: சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற ஆணைப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். மேல்முறையீடு செய்யக்கூடாது, மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராடி வருகின்றனர். இதன தொடர்ச்சியாக ஒப்பாரி முழக்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இதற்கு கோட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் அருள்தாஸ் வரவேற்றார். பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சுரேஷ்குமார், சங்க மாநில தலைவர் ராஜமாணிக்கம் பேசினார். வட்டகிளை தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார். *பழநியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது.