மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
15-Nov-2024
வேடசந்துார் : பாதுகாப்பு கேட்டு வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.மணப்பாறை வையம்பட்டி குத்தம்பட்டியை சேர்ந்தவர் பிலோமினா 22. தனியார் மருத்துவமனையில் நர்சாக உள்ளார். இவர் குட்டம் கோட்டூரை சேர்ந்த டிரைவர் அடைக்கலராஜை 30 , காதலித்தார். இதற்கு அடைக்கலராஜ் பெற்றோர் ஆதரவு தெரிவித்த நிலையில் பிலோமினாவின் பெற்றோர் எதிர்த்தனர். இருவரும் திருமணம் செய்த நிலையில் பாதுகாப்பு கேட்டு வேடசந்துார் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரிடம் பேச்சுவார்ததை நடத்திய எஸ். ஐ., ஜெயலட்சுமி யாரும் இடையூறு செய்யக்கூடாது என எழுதி வாங்கி காதல் ஜோடியை வாழ்த்தி வழி அனுப்பினார்.
15-Nov-2024