உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி வெளிமாநில ரகங்கள் கண்டு ஆர்வலர்கள் குஷி

திண்டுக்கல்லில் சேவல் கண்காட்சி வெளிமாநில ரகங்கள் கண்டு ஆர்வலர்கள் குஷி

திண்டுக்கல்: அழியும் நிலையிலிருக்கும் சேவல்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல்லில் நடந்த கண்காட்சியில் வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு ரக சேவல்கள் பங்கேற்றன. அவற்றை கண்டு பார்வையாளர்கள் உற்சாகமுற்றனர்.குட்டியப்பட்டியில் திண்டுக்கல் அசில் ஆர்கனேசேஷன், வேர்ல்டு அசில் ஆர்கனேசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் இக்கண்காட்சி நடந்தது.காலை 10:00 மணிக்கு துவங்கிய கண்காட்சி மாலை வரை நடந்தது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து கிளிமூக்கு, விசிறிவால் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் 300க்கு மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. வால் அமைப்புகள், மூக்கு, பூ அமைப்பு, கழுத்து நீளம், உயரம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. முதல் பரிசாக 10 சேவல்களுக்கு ஏர்கூலர், 2வது பரிசாக 20 சேவல்களுக்கு சிறிய ஏர்கூலர், 3வது பரிசாக 70 சேவல்களுக்கு மின்விசிறிகள் வழங்கப்பட்டன. இதை காண ஏராளமானோர் குவிந்தனர்.கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நெல்சன் கூறியதாவது: முற்காலத்தில் சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட சேவல்களை தற்போது அழகுக்காக வீடுகளில் வளர்க்கின்றனர். இருந்தாலும் பல சேவல் இனங்கள் அழியும் நிலையில் உள்ளது. அதை வளர்ப்போரும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். சேவல்கள் வளர்ப்பை ஊக்குவிக்க கண்காட்சியை 10வது ஆண்டாக நடத்துகிறோம் என்றார்.

சேவலுக்கு ரூ.7 லட்சம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச்சேர்ந்த ரங்கராஜனுக்கு சொந்தமான பொன்ரம் எனும் ரகசேவல் பங்கேற்றது.இதை ரூ.7 லட்சத்திற்கு ஒருவர் விலைக்கு கேட்டார். ஆனால் ரங்கராஜன் விற்பனைக்கு இல்லை என தெரிவித்து விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை