உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் ரோப்காரில் ரோப் மாற்றம்

பழநி கோயில் ரோப்காரில் ரோப் மாற்றம்

பழநி : பழநி முருகன் கோயில் சென்று வர பயன்படும் ரோப் காரில் அக். 7 முதல் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ரோப்காரில் ரோப் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.பழநி கோயில் சென்று வர ரோப் கார் மூன்று நிமிடத்தில் பயன்பட்டு வந்தது. இதில் அக். 7 முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பழுதடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. ரோப்காரின் கம்பி வட சக்கரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. மேலும் இயந்திரத்தின் உறுதி தன்மையும் சோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 730 மீட்டர் நீளமுடைய புதிய ரோப் மாற்றும் பணிகள் துவங்கியது. விரைவில் பெட்டிகள் சரி செய்யப்பட்டு சோதனைகளுக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ