உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

பழநியில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

பழநி:பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று நிறுத்தப்பட உள்ளது.பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் 3 நிமிடத்தில் கோயில் செல்ல முடியும். தினமும் பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(ஜன.,30) நடக்க உள்ளதால் இதன் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயில் சென்றுவர வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ