கொடையில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.கொடைக்கானல் நகர் மையத்தில் உள்ளது தோட்டக்கலைத்துறையின் பிரையன்ட் பூங்கா. இங்கு 62வது மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகள் நடவு செய்து தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இதற்கிடையே இங்கு உள்ள ரோஜா மலர் படுகைகளில் உள்ள செடிகளுக்கு சில மாதங்களுக்கு முன் கவாத்து எடுக்கப்பட்டு தற்போது நன்கு பூத்துள்ளன. இப்பூங்காவில் நுாற்றுக்கு மேற்பட்ட வகையான ரோஜாவும், 1500 செடிகளும் உள்ளன. இவை பல வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் பச்சை நிறத்திலான ரோஜா பூத்துள்ளதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.