ரோட்டோரம் கொட்டப்படும் அழுகிய முட்டைகள்
வேடசந்துார் : திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி ரங்கமலை கணவாய் மாவட்ட எல்லை பகுதியாக உள்ளது. நெடுஞ்சாலை ஓரம் லாரிகளை நிறுத்திவிட்டு மலைப்பகுதியில் இயற்கை உபாதைகளை கழித்து செல்வது வாடிக்கை. இந்நிலையில் சமீப காலமாக நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து மருத்துவக் கழிவு, கெட்டுப்போன கோழி முட்டைகளை பெட்டிகளில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். முட்டைகளை கொட்டிச்செல்லும் வாகனங்களால் இப்பகுதி மக்கள், டூவீலர், பஸ்களில் செல்வோர் கடும் துர்நாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதன் மீது நெடுஞ்சாலைத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.