மேலும் செய்திகள்
தக்காளி விலை சரிவு; விவசாயிகள் கவலை
18-Jan-2025
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சாலைப்புதுார், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், அப்பியம்பட்டி, பாலப்பன்பட்டி பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது தக்காளி பறிப்பு மும்முரமாய் நடந்து வருகிறது. மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக தக்காளி செடி நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. விலையும் இல்லை. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.10 லிருந்து ரூ.18 வரை விற்பனையானது. நோய் பாதித்த, விலை கிடைக்காத தக்காளியை விவசாயிகள் குப்பையில் வீசுகின்றனர். அப்பியம்பட்டி விவசாயி கோவிந்தராஜ் கூறியதாவது:பனியால் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டன. பூச்சிக்கொல்லி மருந்து அடித்தும் புழுக்கள் சாகவில்லை. புழுக்களால் பாதிக்கப்பட்ட தக்காளியில் ஓட்டை விழுந்து வீணாகிறது. செடியிலேயே தக்காளி அழுகி விடுவதால் அவற்றைப் பறித்து குப்பையில் வீசுகிறோம் என்றார்.
18-Jan-2025