வேடசந்துாரில் ரூ.1.18 கோடி பணி பூமி பூஜை
வேடசந்துார்: நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம் பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குடன் கூடிய நிழற்குடை , ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. வேடசந்துார் தி.மு.க.,எம்.எல்.ஏ , காந்திராஜன் தலைமை வகித்து பூமி பூஜையை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., சரவணன்,ஊர் முக்கிய பிரமுகர்கள் ராமகிருஷ்ணன், நந்தீஸ்வரன், முனியப்பன், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், சாகுல்ஹமீது, முருகவேல் பங்கேற்றனர். இதை தொடர்ந்து கூவக்காபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில் ரூ.70 லட்சம் திட்ட மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நிர்வாகிகள் மாரிமுத்து, கார்த்திகேயன் பங்கேற்றனர்.