உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.7 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

ரூ.7 லட்சம் மோசடி: இருவர் மீது வழக்கு

திண்டுக்கல்:மதுரையை சேர்ந்தவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்,புதுக்கோட்டையை சேர்ந்த இருவரை போலீசார் தேடுகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தென்கரையை அடுத்த ஊத்துக்குழியை சேர்ந்தவர் மக்கள் நல பணியாளர் ஆதிமுத்து 53. இவரின் மகன் சிவராஜ். பி.காம்., படிக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் ஆதிமுத்துவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியை சேர்ந்த மாமத்தி, புதுக்கோட்டை மாவட்டம் கதவம்பட்டியை சேர்ந்த கிருபாகரன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது, சிவராஜூக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இருவரும் ரூ.7 லட்சம் கேட்டுள்ளனர். இதை நம்பிய ஆதிமுத்து பல்வேறு தவணைகளாக ரூ.7 லட்சத்தை கொடுத்துள்ளார். வேலை வாங்கி தரவில்லை. ஏமாற்றமடைந்த ஆதிமுத்து திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப்பிடம் புகார் அளித்தார். தலைமறைவான மாமத்தி, கிருபாகரனை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., குமரேசன், இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி