சப்தகன்னிமார் கோயில் திருவிழா
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு பைபாஸ் ரோடு பேசும் சப்தகன்னிமார் கோயில் புரட்டாசி திருவிழா கும்பாபிஷேகம் முடிந்து 48-ம் நாள் மண்டல யாகசாலை பூஜையுடன் துவங்கியது. சப்த கன்னிமார்கள் பூக்கள், பட்டாடைகள் நாணல் புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களான விநாயகர், கருப்பணசுவாமி, முனியாண்டி, நாகம்மாள்,வேட்டைக்காரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து உலக நன்மை, மழை வேண்டி தீபாராதனைகள் கூட்டு வழிபாடு நடந்தது. கிடா பலியிட்டு பொங்கல் வைத்தனர். உச்சி கால பூஜையில் படையலிட்டு அருள்வாக்கு கூறப்பட்டது. ஏற்பாடுகளை பூசாரி பாண்டி செய்திருந்தார்.