| ADDED : ஜன 30, 2024 06:59 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் அலைபேசிகளில் வரும் தேவையற்ற விளம்பரங்கள், சூதாட்ட அழைப்புகள், விளையாட்டு செயலிகள், ஆபாச காணொலிகளால் மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை இழக்கும் அபாயம் நேர்ந்துள்ளது. மாவட்டத்தில் வசிக்கும் 90 சதவீதம் மக்கள் அலைபேசியின் பயன்பாட்டில் உள்ளனர். தொடுதிரை கணினி சிஸ்டமான அலைபேசியில் பல நேரங்களில் தேவையில்லாத செயலிகள் தானாகவே தஞ்சமடைவதாக தொடர் புகார்கள் வருகின்றன. வாட்ஸ்ஆப், முகநுால், யூடியூப் செயலிகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m1rhz8tj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பயன்பாட்டின்போது இடையிடையே ஆன்லைன் ரம்மி, சேர் மார்க்கெட் டெபாசிட், லக்கி நம்பர்ஸ், ஸ்னோபால், கலர்ஸ் கலெக்சன் போன்ற சூதாட்ட அழைப்பு விளம்பரங்கள் வந்தபடி உள்ளது. இத்தகைய சூதாட்ட விளையாட்டுகளில் வென்றவர்களை கைதட்டி ஆர்ப்பரித்து, பணம் கட்டுகட்டாக கிடைப்பதுபோல் காட்சிகள் ஒளிபரப்பு ஆவதால் பாமரர்கள் எளிதில் வசியப்பட்டு அந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழக்கின்றனர்.இதோடு போனில் சாட் செய்யலாம் வாங்க என இளம்பெண்கள் ஆபாச அழைப்பு விடுப்பது போன்ற விளம்பரம் ஒருபுறம் களைகட்டி வருவது கலாசார சீர்கேடாய் உருமாறி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் புரளும் அலைபேசியில் பல நேரங்களில் ஆபாச படங்களும், அருவருப்பான வீடியோ பதிவுகளும், முறையற்ற உரைநடைகளுமாக வருவதால் இளையதலைமுறையினர் மனதளவிலும், செயலளவிலும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் நிர்வாகமும் முன் வர வேண்டும்....................கையிருப்புக்களையும் இழக்க நேரும் அலைபேசி சூதாட்டத்தில் அதிகம் பணத்தை இழப்பதில் மாணவர்களும், பெண்களுமே உள்ளனர் . இதனால் ஒருகட்டத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரைதொடர்கிறது. பள்ளி, கல்லுாரிகளில் வெறும் பாடத்தை மட்டும் போதிக்காமல் நன்னெறிவகுப்புக்களையும் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதாக நினைத்துகையிருப்புக்களையும் இழந்து பலர் தவிக்கின்றனர். மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசையில் குருவின் இடத்தில் கூகுளை நாடும் மக்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதும் ஒருவகையிலான நம்பிக்கை துரோகமேயாகும். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதுபோன்ற விளம்பரங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தயாளன், தனியார் ஊழியர், திண்டுக்கல்................