பள்ளி தரம் உயர்வு
வடமதுரை: அய்யலுார் அருகே வளவிசெட்டிபட்டியில் இயங்கிய அரசு நடுநிலைப் பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இதற்காக பாலமடைப்பட்டி பகுதியில் இடம் தானம் பெறப்பட்டு தற்போது மாடி வகுப்பறைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி அமைச்சர் உத்தரவு வழங்கி அரசாணையும் வெளியாகி இருப்பதாக வேடசந்துார் காந்திராஜன் எம்.எல்.ஏ., ஒண்டிபொம்மன்பட்டியில் நடந்த கிராம சபா கூட்டத்தில் தெரிவித்தார்.